Friday 3rd of May 2024 07:55:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
விஷால்-ஆர்யா மீண்டும் இணைந்துள்ள 'எனிமி' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது!

விஷால்-ஆர்யா மீண்டும் இணைந்துள்ள 'எனிமி' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது!


விஷால்-ஆர்யா இருவரும் நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'எனிமி' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பாலா இயக்கத்தில் வெளிவந்த 'அவன் இவன்' திரைரப்படத்தில் விஷால், ஆர்யா இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தார்கள்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'எனிமி' திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாசும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், எனிமி படத்தின் டீசரை இன்று (ஜூலை 24) மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனால் விஷால், ஆர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE